ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏக்களை தலா ரூ.10 கோடி கொடுத்து வாங்க பாஜக முயற்சி

0
163

ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏக்களை   தலா ரூ.10 கோடி கொடுத்து தங்கள் வசம் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

மத்திய பாஜக அரசுக்கு தங்கள் ஆட்சியில் வளர்ச்சிக்கான விஷயம் என்று கூறுவதற்கு எதுவும் இல்லை. எனவேதான் தற்போது அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது எங்களது கட்சியின் 7 எம்எல்ஏக்களை தலா ரூ.10 கோடிக்கு விலைக்கு வாங்க பாஜக முயற்சிக்கிறது. 

இதற்கு முன்னரும் கூட அக்கட்சி எங்களது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது.  ஆனால் அப்போது தேர்தலில் அவர்களுக்கு பொதுமக்கள் சரியான பதிலை வழங்கினர்.  இந்த முறையும் அவர்களது நடவடிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும். 

மேற்கு வங்க தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களைப் பற்றிப் பேசியது சரியல்ல.  இந்தியா ஒரு ஜனநாயக நாடு.  அதனாலேயே தற்போது தான் பதவியில் இருப்பதை பிரதமர் மோடி உணர வேண்டும் என்றார். 

மனிஷ் சிசோடியாவின் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. பாஜகவின் டெல்லி செய்தி தொடர்பாளர்  அசோக் கோயல் பேசும்போது, தனது கட்சியின் எதிர்ப்பு எம்எல்ஏக்களை தடுத்து நிறுத்த அரவிந்த் கெஜ்ரிவாலால்  முடியவில்லை; எனவே அவர்களது கட்சியின் உள்விவகாரங்களில் பாஜகவின் பெயரை இழுக்கின்றார்கள் என்று கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here