ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வு இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. 2018 ஐபோன் மாடல்களின் அறிமுக நிகழ்வு செப்டம்பர் 12-ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் புதியவகை ஐபோன் மற்றும் கேட்ஜெட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி புதிய 12.9 இன்ச், 11 இன்ச் ஐபேட் ப்ரோ டேப்லெட் மற்றும் சீரிஸ் 4 ஆப்பிள் வாட்ச் எனப் பலவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 12 நிகழ்வில் ஆப்பிள் புதிய வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி வட்ட வடிவம் கொண்ட பெரிய டையல், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, அதிக ரெசல்யூஷன் மற்றும் பல்வேறு அம்சங்களையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக வரவிற்கும் iOS 12, உங்கள் ஐபோன் மற்றும் ஐபாட் அனுபவம் வேகமாகவும், செயல்பாட்டு திறன் அதிகமுள்ளதாகவும் மற்றும் இன்னும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் வரவிற்கும் iOS 12 இல் நோட்டிபிகேஷனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நோட்டிபிகேஷன் தனி தனியே ஒன்றன் பின் ஒன்றாக ஐபோன் முகப்பு முழுவதை ஆக்கிரமித்து வந்தன. தற்போது கொடுக்கப்பட்டுள்ள இந்த அப்டேட்டின் படி ஒவ்வொரு ஆப்-பின் நோட்டிபிகேஷனும் ஒரே குழும அறிவிப்புகளாக(Grouped notifications) முகப்பில் இருக்கும்.

தேவையான ஆப்-பை தேர்ந்தெடுக்கும்போது மொத்த நோட்டிபிகேஷன் ஒன்றின் பின் ஒன்றாகத் தெரியும், முகப்பு தோற்றமும் பார்க்க இலகுவாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

“ஸ்கிரீன் டைமிங்” நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகள் எப்படி ஐபோன் பயன்படுத்துகிறீர்கள் என்றும், நீங்கள் எதற்காக அதிகம் உங்கள் போன்-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்று தெளிவான விளக்கப்படம் மூலம் உங்கள் பயன்பாட்டுக்கான சமநிலையை அறிந்து உங்கள் பயன்பாட்டை எளிதாகவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்