இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை எங்கே திறக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு கேள்விக் குறியாகவே இருந்தது. மேலும் இது பற்றிய விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த விற்பனையகம் மும்பையில் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை மும்பையின் பந்த்ரா குர்லா வளாகத்தில் திறக்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் சுமார் 20,000 முதல் 25,000 சதுரஅடி பரப்பளவு கொண்ட இடத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஆப்பிள் ஸ்டோராக இருக்கும் என தெரிகிறது.

தற்சமயம் முதல் ஆப்பிள் விற்பனையகத்திற்கான வடிவமைப்பு, உள்புற மரச் சாமான்களை இறக்குமதி செய்வதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விற்பனையகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள்நிறுவனம்விரைவில்சில்லறைவிற்பனையகங்களைஇந்தியாவில்திறக்கதிட்டமிட்டுள்ளது. ஆப்பிள்நிறுவனம் தற்சமயம்தனதுசாதனங்களைப்ளிப்கார்ட், அமேசான், பே.டி.எம். மால்மற்றும்ஆஃப்லைன்விற்பனையாளர்கள்மூலம்விற்பனைசெய்துவருவது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)