ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 4 மாடல்களை கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. 40 எம்.எம். மற்றும் 44 எம்.எம். என இருவித அளவுகளில் கிடைக்கும். இந்த இரு புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களில் எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் டிஜிட்டல் கிரவுன், ஹெப்டிக் ஃபீட்பேக், 50% அதிக சத்தம் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எஸ்4 சிப், 64-பிட் டூயல் கோர் பிராசஸரையும் கொண்டுள்ளன. அத்துடன் புதிய உடல்நலன் அம்சங்கள், புதிய அக்செல்லோமீட்டர் மற்றும் கைரோஸ்கோப் உள்ளிட்டவை கொண்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 40எம்.எம். (ஜி.பி.எஸ்.) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / சில்வர் அலுமினியம் கேஸ், வைட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் / சில்வர் அலுமினியம் கேஸ், சீஷெல் ஸ்போர்ட் லூப் / கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் லூப் விலை ரூ.40,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 44எம்.எம். (ஜி.பி.எஸ்.) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் லூப் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.43,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 44எம்.எம். (ஜி.பி.எஸ்.+செல்லுலார்) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் லூப் / சில்வர் அலுமினியம் கேஸ், வைட் ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.52,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடல்கள் பிளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் பொருட்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்வோரிடம் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விநியோகம் அக்டோபர் 19-ம் தேதி முதல் துவங்குகிறது.

( இச் செய்தி பல தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here