ஆப்பிள் நிறுவனம் எக்ஸ்.எஸ்(iPhone XS), மேக்ஸ்(iPhone XS Max), ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஆகிய புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. iPhone XS – விட, iPhone XS Max சற்று அளவில் பெரியது. எக்ஸ்.எஸ்(iPhone XS) 5.8 இன்ச் அளவுள்ளதாகவும், மேக்ஸ்(iPhone XS Max)6.5 இன்ச் அளவுள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸடீவ் ஜாப்ஸ் தியேட்டரில் புதிய ஃபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

iPhone XS, iPhone XS Max சிறப்பம்சங்கள்

இவ் இரு ஸ்மார்ட்போன்களும் ஐ.ஓ.எஸ் 12- இயங்கு தளத்தில் செயல்படுகின்றன. XS-மாடல் 5.8 இன்ச் டிஸ்ப்ளேயும் XS Max- 6.5 இன்ச் டிஸ்ப்ளேயும் கொண்டுள்ளன. ஃபிங்கர் பிரின்ட் செக்யூரிட்டி சிஸ்டம், 7 நானோ மீட்டர் பிராசஸர் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஐஃபோன் எக்ஸை விடவும் XS ஃபோன் 30 நிமிடங்களும், XS Max 1 மணி நேரம் 30 நிமிடங்களும் கூடுதலாக சார்ஜ் நிற்கும். ஃபேஸ் ஐடி அன்லாக் சிஸ்டம், 12 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 7 மெகா பிக்ஸ்ல் முன்பக்க கேமரா ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இரட்டை சிம்களை பயன்படுத்தும் வசதி இந்த புதிய மாடல்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜிகாபைட்-கிளாஸ் எல்.டி.இ. வேகத்தில் புதிய மாடல்கள் செயல்படும்.

விலை விபரம் :

சர்வதேச சந்தையில் எக்ஸ்.எஸ்(iPhone XS) 64 ஜிபி வெரியண்ட் விலை ரூ. 71,800- க்கு கிடைக்கும். 256 ஜிபி வெரியண்ட் ரூ. 82,600- க்கும், 512 ஜி.பி. வெரியண்ட் ரூ. 97,000- க்கு கிடைக்கும்.

மேக்ஸ்(iPhone XS Max) விலை, 64 ஜிபி வெரியண்ட் ரூ. 79,000- ஆகவும். 256 ஜிபி வெரியண்ட் ரூ. 89,800- ஆகவும், 512 ஜி.பி. வெரியண்ட் ரூ. 1,04,200- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மாடல்களையும் செப்டம்பர் 14-ந்தேதியில் இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம். 21-ம் தேதியில் இருந்து ஷிப்பிங் தொடங்கி விடும். கிரே, சில்வர் மற்றும் தங்க நிறத்தில் இந்த மாடல் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்