ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் 14 இந்தியாவில் வெளியீடு

Apple has officially released the stable version of the latest iOS 14 software for everyone including Indian users.

0
113

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐஒஎஸ் 14 மற்றும் ஐபேட் ஒஎஸ் 14 இயங்குதளங்களை வெளியிடுகிறது.

புதிய அப்டேட் ஏற்கனவே டவுன்லோட் ஆகி, பயனர்களை இன்ஸ்டால் செய்ய கோருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு இன்ஸ்டால் ஆகாதவர்கள் தங்களது சாதனத்தின் செட்டிங்ஸ் பகுதியில் சாப்ட்வேர் அப்டேட் பகுதிக்கு சென்று புதிய இயங்குதளத்தை டவுன்லோட் செய்யலாம்.

புதிய ஐஒஎஸ் 14 அப்டேட் 

 • ஐபோன் 6எஸ் சீரிஸ்,
 • ஐபோன் 7 சீரிஸ்,
 • ஐபோன் 8 சீரிஸ்,
 • ஐபோன் எக்ஸ்,
 • ஐபோன் எக்ஸ்எஸ்சீரிஸ்,
 • ஐபோன் 11 சீரிஸ்,
 • ஐபோன் எஸ்இ (1&2 மாடல்கள்) 

உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படுகிறது. 

இதேபோன்று ஐபேட் ஒஎஸ் 14

 • ஐபேட் ஏர் 2
 • புதிய ஐபேட் ஏர்,
 • ஐபேட் மினி 4,
 • ஐபேட் மினி 5,
 • ஐபேட் 5th ஜென்,
 • ஐபேட் ப்ரோ

மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

ஐபோன் எஸ்இ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களுக்கு புது அப்டேட் 3.36 ஜிபி அளவு கொண்டுள்ளது.

ஐஒஎஸ் 14 வெர்ஷனை டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்த பின் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் பலவிதங்களில் மாற்றப்பட்டு இருப்பதை காண முடியும்.

முன்னதாக ஐஒஎஸ் 14 அறிமுகம் செய்யப்பட்டு, பீட்டா வெர்ஷன்களில் வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here