ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்; அரண்டு போன ராமதாஸ்

0
505

  

அதிமுக தலைமையிலான பாமக கட்சி வேட்பாளருக்கு “மாம்பழம்” சின்னதிற்கு பதில் “ஆப்பிள்” சின்னத்திற்கு வாக்கு கேட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை வினோதமாக பார்த்தார் ராமதாஸ்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பாமக 7 தொகுதியில் “மாம்பழம்” சின்னத்தில் போட்டியிடுகிறது. அதன்படி திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து “மாம்பழம்” சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சியினர் பரப்புரை மேற்கொண்டுள்ளனர். 

அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் ஜோதிமுத்துவை ஆதரித்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அமைப்பு செயலாளர் நத்தம் விசுவநாதன் ஆகியோர் திண்டுக்கல் தொகுதியில் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிவாடி மந்தை திடலில் வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், ஸ்டாலின் தற்பொழுது அனைத்து கூட்டங்களிலும் உளறி கொட்டி வருகின்றார் என்று குறை கூறினார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சின்னத்தையே மறந்து விட்டு “ஆப்பிள்” சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். இதனை கேட்ட வேட்பாளர் ஜோதிமுத்து அதிர்ச்சியடைந்தார். உடனே அமைச்சரின் உதவியாளர் அமைச்சரின் காதில் “மாம்பழம்” என்பதை நினைவுபடுத்தினார். பின் அமைச்சர் தனது உளறலுக்காக தன்னையே தலையில் அடித்து கொண்டார், இந்த காட்சியை பார்த்த பொதுமக்களும் அமைச்சரின் செயலை பார்த்து சிரித்தனர்.

மேலும் அமைச்சரின் பேச்சை கேட்டு மேடையில் இருந்த கட்சி நிர்வாகிகளும், வேட்பாளரும் மற்றவர்களும் சிரிக்க, அதனை முன்னாள் அமைச்சரும் நத்தம் விசுவநாதன் ராமதாசிடம் கூறினார். உடனே ராமதாஸ் அமைச்சரை வினோதமாக பார்த்துள்ளார். இதுவும் பொது மக்களிடையே மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here