ஆப்பிள், கூகுள் மீது வழக்கு தொடர்ந்த எபிக் கேம்ஸ் நிறுவனம்

Apple Inc has been on a blocking rampage for the last few weeks now. After blocking games from Facebook, Microsoft and Google, Apple Inc has now blocked the famous "Fortnite" from its App Store.

0
106

‘எபிக் கேம்ஸ்’ நிறுவனத்தால் கடந்த 2017ஆம் ஆண்டு ‘போர்ட்நைட்’ என்ற அமெரிக்க ஆன்லைன் வீடியோ கேம் உருவாக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இதில், 4 பேர் வெவ்வேறு இடங்களிலிருந்து ஆன்லைன் மூலம் இணைந்து விளையாடலாம்.

உலகம் முழுக்க கிட்டத்தட்ட 2.5 கோடி பேர் இந்த கேமை விளையாடி வருகின்றனர். ஆன்லைன் கேம் சந்தையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் லாபத்தை ஈட்டியது.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம், நேரடி கட்டணம் செலுத்தும் விதிமுறை மீறியதாக ஃபோர்ட் நைட் வீடியோ கேம்மை நீக்கியது.

தற்போது போர்ட்நைட் கேம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., இயங்குதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு ஆன்லைன் கேமிலும் வாடிக்கையாளர் பணம் செலுத்தி அப்கிரேடட் வெர்ஷனில் விளையாட, இயங்குதளங்களில் பணம்செலுத்தும் முறையைப் பின்பற்றவேண்டும். ஆனால் ‘எபிக் கேம்ஸ்’ குழுமம் இந்த சட்டத்தைப் பின்பற்றாமல் வரம்பு மீறி செயல்பட்டதால் கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள்இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளன.

இதை எதிர்த்து டெவலப்பரான எபிக் கேம்ஸ் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

அதில், ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆப் ஸ்டோர் தொடர்பான கட்டண நடைமுறைகளுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், பயனர்கள் விளையாட்டுக்கான அணுகலை இழந்தால்ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி #FreeFortnite என்ற ஹேஷ்டேக்குடன் இணையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here