ஆப்பிள் ஐபோன் 11 சீரிஸ் மாடல்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி வழங்கும் அமேசான்-பிளிப்கார்ட்

The major discount on the iPhone 11 has been announced a day after Apple launched its iPhone 12 series which starts at Rs 69,900.

0
165

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ஆப்பிள் ஐபோன் 11 மாடல் மீது ரூ.47,999 தள்ளுபடியை
அமேசான் அறிவித்துள்ளது.

அதேநேரம் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஐபோன் 11 ப்ரோ மாடல் மீது ரூ.26,600 தள்ளுபடியை அறிவித்துள்ளது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஐபோன் 11 மீது ரூ.6,901 தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.47,999 விற்கப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.54,900 ஆகும். கூடுதலாக, அமேசான் தளத்தில் எச்.டி.எஃப்.சி வங்கிஅட்டைகள் அல்லது ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சில தள்ளுபடிகளும் கிடைக்கும்.

இந்த சலுகை 64 ஜிபி மெமரி ஐபோன் 11 மாடல் வெரியண்ட்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 11-இன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களுக்கும் இதே போன்ற தள்ளுபடி வழங்கப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.

அதேநேரம், பிளிப்கார்ட்டில் ஐபோன் 11 ப்ரோவின் 64 ஜிபி மெமரி வேரியண்ட்டை அதன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ரூ.79,999 க்கு வாங்கலாம்.

இது ஐபோன் 11 ப்ரோவின் அதிகாரப்பூர்வ தொடக்க விலையை விட ரூ.26,601 குறைவாகும். ஏனெனில் அதன் அசல் விலை ரூ.1,06,600 ஆகும். எஸ்பிஐ கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் கூடுதல் சலுகைகளை வழங்கவும் வாய்ப்புள்ளது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது அக்டோபர் 17 முதல் வழக்கமான வாடிக்கையாளர்களுக்குத் தொடங்கும். அதேநேரத்தில் அக்டோபர் 16 முதல் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இது நேரலைக்கு வரும்.

பிளிப்கார்ட் அக்டோபர் 16 முதல் அதன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை தொடங்கும். அதன் பிளஸ் உறுப்பினர்கள் அக்டோபர் 15 மதியம் 12 மணி முதல் (நண்பகல்) இந்த பண்டிகை விற்பனையில் பொருடகளை வாங்க முடியும்.

மேலும்,  சமீபத்தில் அறிமுகமான ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் தீபாவளி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்ஒரு பகுதியாக ஐபோன் 11 உடன் ஏர்போட்ஸ் இலவசமாக கிடைக்கும். இந்த சலுகை அக்டோபர் 17 முதல் தொடங்கும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here