அதிகமாக ஆபாச வீடியோக்களை பார்க்கும் திருமணமாகாத மற்றும் விவாகரத்து ஆன ஆண்களுக்கு, ஆண் குறி விறைப்பில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாச வீடியோக்கள் மட்டுமன்றி திருப்தியான உடலுறவு இல்லை என்றாலும் ஆண் குறி விறைப்பின்மை ஏற்படும் என்று கூறியுள்ளது.

லண்டனில் நடைபெற்ற இந்த ஆய்வில் அங்கு 80 சதவீதம் ஆண்கள் இந்தப் பிரச்னையால் அவதிப்படுவதாக கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து டெய்லி மெயில் இணையதளத்தின் மனநல மருத்துவர் பேசுகையில் ஆபாச வீடியோக்கள் மட்டுமன்றி அவர்களின் ஆல்கஹால் பழக்கமும் கூடுதல் பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உலக அளவில் மில்லியன் கணக்கான ஆண்கள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்.

”இதுபோன்ற தொடர் அனுபவங்களால் அவர்கள் உடலுறவுக்கு தயாராகும்போது பதட்டம், பயம் அதோடு அவர்கள் மீது நம்பிக்கை இன்மை உண்டாகிறது. இதனால் அவர்கள் உடலுறவில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் விறைப்பின்மை தொற்றிக்கொள்கிறது” என்கிறார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here