ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எங்கள் எம்.எல்.ஏ.வுக்கு பாஜக தருவதாக சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா? என பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பாக பேசியிருக்கிறார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் எங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடக்கிறது என்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் குமாரசாமி. அவருக்கு கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா பதிலடி கொடுத்திருக்கிறார்.

முன்னதாக முதல்வர் குமாரசாமி, “ஆபரேஷன் லோட்டஸ் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. எங்கள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு பாஜக மிகப்பெரிய தொகையைத் தர முன்வந்தது. அது எவ்வளவு தொகை எனத் தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். ஆனால், எங்கள் எம்.எல்.ஏ. தனக்கு எவ்விதப் பரிசும் வேண்டாம் இனி இதுபோன்று தன்னை அணுக வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இப்படித்தான் அவர்கள் இன்னும் குதிரை பேரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்” என்றார்.

மேலும் ஆனால் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு வரமாட்டேன் என்று கூறி இருக்கிறார். தற்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னை தொடர்பு கொள்வதை விட்டுவிடும்படியும் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவிடம் கூறி இருக்கிறார். இந்த தகவலை அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வே என்னிடம் கூறினார்.

அந்த எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜனதா கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்ன என்பதை நான் கூறமாட்டேன். அதுகுறித்து அந்த எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.

கடந்த 2008-ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுத்து முதல் மந்திரி பதவியை எடியூரப்பா தக்க வைத்துக்கொண்டார். அதுபோலத்தான் தற்போதும் எம்.எல்.ஏ.க் களை இழுக்கும் பணியை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.

எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதை நான் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here