ஆபரேஷன் லோட்டஸ்; சரத் பவாரின் கட்சியை உடைத்ததா பாஜக? அல்லது நாடகமா? என்சிபியின் 22 எம் எல் ஏக்கள் விலை போன பின்னணி

0
564

மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்  சந்தித்துப் பேசினார். இதற்கு அடுத்த நடந்த அரசியல் திருப்பமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், சரத் பவாருக்கு தெரியாமலே அஜித் பவார்  ஆட்சியில் அமர்ந்துள்ளார். (சரத் பவாருக்கு தெரியாமல் இது நடந்து இருக்காது என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வை )

முன்னதாக, வெள்ளிக்கிழமை  மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு திடீர் என்று ரூ. 600 கோடி நிவாரணத் தொகையை மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் புருஷோத்தம் ருபல்லா அறிவித்து இருந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இணைந்து உத்தவ் தாக்க்ரே முதல்வர் என்று முடிவு செய்யப்பட்டதாக சரத் பவார் தெரிவித்திருந்தார். 

சிவ சேனாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக வேகமாக காய்களை நகர்த்தியுள்ளது. முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதில்லை என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷாவும் உறுதியாக இருந்துள்ளார்.

ஒரு பக்கம் சரத் பவாருடன் பேசிக் கொண்டே மறு பக்கம் என்சிபி கட்சியை பாஜக உடைத்துள்ளதாக சரத் பவாரும் அவரது மகளான சுப்ரியா சூலேயும் தெரிவிக்கின்றனர் . நம்பும்படியாக இல்லைதான். தற்போது என்சிபியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவுக்கு 105 எம்எல்ஏ க்கள் உள்ளனர். தற்போது தேசியவாத காங்கிரஸின்  35 எம்எல்ஏக்களை சேர்த்தால் 140 பேரின் ஆதரவுதான் உள்ளது. ஆட்சிக்கு 145 பேரின் ஆதரவு தேவை நிலையில், இன்னும் 5 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. 54 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 35 பேர் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். 

சுயேட்சைகளின் ஆதரவை பாஜக நாடலாம் அல்லது சிவ சேனா மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜக உடைக்கலாம். அல்லது சிவ சேனா எம் எல் ஏக்கள் வாங்கப்படலாம் தேசிய அளவில் முக்கிய மாநிலமாக மகாராஷ்டிரா பார்க்கப்படுகிறது. எனவே, மகாராஷ்டிரா ஆட்சியை வேறு எந்தக் கட்சிக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருந்துள்ளது 

ஆப்ரேஷன் லோட்டஸை பாஜக கனகச்சிதமாக மகாராஷ்டிராவில் செயல்படுத்தியுள்ளது.  பாஜகவுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே அருணாசலப் பிரதேசத்தில் இருந்து கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்த ஹரியானா மாநிலம் வரை ஆப்ரேஷன் லோட்டஸை பாஜக நிகழ்த்தியுள்ளது. 

அருணாசலப் பிரதேசத்தில் கடந்த 2016, செப்டம்பர் மாதம் ஆட்சி செய்து கொண்டு இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கவிழ்த்தது பாஜக . காங்கிரஸ் முதல்வராக இருந்த பேமா காண்டு உள்பட 43 காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் பாஜகவுக்கு தாவினர். இரண்டு சுயேட்சை உறுப்பினர்களும் ஆதரவு கொடுத்தனர். வெறும் 11 எம் எல் ஏக்களை  மட்டுமே கொண்டிருந்த பாஜக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் அடியோடு சரிந்தது. மீண்டும் முதல்வராக பேமா காண்டு தேர்வு செய்யப்பட்டார்.

இவ்வாறு  பாஜகவின் கவிழ்ப்பு அரசியலும், எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கும் அரசியலும் ஓகோன்னு போய்கிட்டுதான் இருக்கு.   இதுவேதான் 2015லும் நடந்தது . 45 நாட்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி இருந்தது. மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது.

கர்நாடகாவிலும் இதுதான் நடந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மஜத எம் எல் ஏக்கள விலைக்கு வாங்கப்பட்டனர்.  பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தனர். அங்கும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சி அமைத்தது.

சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த ஹரியானாவிலும் இதுதான் நடந்தது. காங்கிரஸ் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது.

மகாராஷ்டிராவிலும் அதுதான் நடந்துள்ளது. தொடர்ந்து அழைப்பு விடுத்தும் சிவ சேனா மறுத்து வந்தது. அமைதியாக ஆட்சியில் அமர்ந்தது பாஜக. பாஜகவுக்கு சரத் பவாரின் மறைமுக ஆதரவுடன்தான் அஜித் பவார் ஆதரவு கொடுத்து இருக்கிறார் என்றும்  பேசப்படுகிறது. (அநத பேச்சு உண்மையாக இருக்க 99 சதவீதம் வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் சரத் பவாரின் வரலாறு அப்படி )  

பிரதமரை சரத் பவார் சந்தித்த இரண்டு நாட்களில் அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளது. சரத் பாவரின் ஆசீர்வாதத்துடன்தான் அஜித் பவார் துணை முதல்வராகி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. என்சிபியையும் உடைத்த சரத் பவாருக்கே தெரியவில்லை என்பதெல்லாம் சரத் பவார் நடத்தும் நாடகமாக கூட இருக்கலாம் .  தற்போது 22 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அதிருப்தியில் இருக்கும் சிவ சேனா எம்எல்ஏக்களையும் பாஜக வாங்கும் வாங்கலாம் வாங்காமலும் இருக்க வாய்ப்பு குறைவு .   

அஜித் பவார் ஆதரவுக் கடிதம் கொடுத்தார் என்று பாஜக கூறுகிறது. தேசியவாத காங்கிரஸ்  கட்சியின் பேரவைத் தலைவராக அஜித் பவார் இருப்பதால் அவர் ஆதரவுக் கடிதம் கொடுத்தாலே அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரவு கொடுத்த மாதிரிதான் என்று பாஜகவின் கிரீஸ் மகாஜன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here