சென்னையில் ஆபரண தங்கம் விலை (ஆகஸ்ட்-21) இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் அதிரடியாக உயர்ந்து வந்தது. மார்ச் 23ம் தேதி கடந்த 7ம் தேதி வரை சவரனுக்கு 11,712 வரை உயர்ந்தது.  7ம் தேதி ஒரு சவரன் 43,328க்கு விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்தது. அதன் பிறகு 8ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து வந்தது.

8ம் தேதி ஒரு சவரன் 43,080, 10ம் தேதி 42,920, 11ம் தேதி 41,936, 12ம் தேதி 40,832க்கும் விற்கப்பட்டது.  13ம் தேதி 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் 5,076க்கும், சவரன் 40,608க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,740 வரை குறைந்தது. தங்கம் விலை குறைந்து வந்தது  நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது.

ஆனால், மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5100க்கும், சவரனுக்கு 192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,800க்கும் விற்கப்பட்டது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றமின்றி  ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,800ஆக இருந்து வந்தது. வர்த்தக தொடக்கத்தின் முதல் நாளான திங்கள் கிழமை 17-ம் தேதி, தங்கம் விலை சவரன் ரூ.232 குறைந்து ரூ.40,568க்கு விற்பனையானது.

ஆனால், கடந்த செவ்வாயன்று தங்கம் விலை மீண்டும்  ரூ.736 உயர்ந்தது .ஒரு கிராம் ரூ. 92 உயர்ந்து ரூ. 5,167க்கும் சவரன் ரூ.736 உயர்ந்து ரூ.41,336க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம், தங்கம் சவரனுக்கு ரூ.1,008 குறைந்து ரூ.40,320க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ஒரு  கிராம் ரூ.5,084க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.60 உயர்ந்து ரூ.74.30க்கு ஒரு கிராம் ரூ.74.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,300 ஆக உள்ளது. இதற்கிடையில், தங்கம் விலை உயர்வதும், குறைவதும் ஆக உள்ளதால், நகை  பிரியர்கள் தங்கம் எப்பொழுது வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here