சென்னையில் சனிக்கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து, ரூ.31,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை, ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) வரலாறு காணாத வகையில் மீண்டும் உயர்ந்து, பெரிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமையான இன்று(மார்ச் 14) 22 கிராம் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31,472-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.79 குறைந்து, ரூ.3,934-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 1,784 ரூபாய் குறைந்துள்ளது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.44.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2000 குறைந்து ரூ.44,000 ஆகவும் விற்கப்படுகிறது. 

மார்ச் 14 சனிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ………………… 3,934

1 சவரன் தங்கம் ………………… 31,472

1 கிராம் வெள்ளி ……………… 44.00

1 கிலோ வெள்ளி …………….. 44,000

மார்ச் 15 வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ………………… 4,013

1 சவரன் தங்கம் ………………… 32,104

1 கிராம் வெள்ளி ……………… 46.00

1 கிலோ வெள்ளி …………….. 46,000

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here