சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.33,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 உயர்ந்து ரூ.4,216-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.50-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம் ?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க  மத்திய கூட்டுறவு வங்கிக்கான வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் புள்ளி 5 சதவீதம் குறைத்தார்கள். அதனால், வைப்பு நிதியில் முதலீடு செய்திருக்கும்  முதலீட்டாளர்கள், வைப்பு நிதியில் இருந்து முதலீட்டை எடுத்து தங்கமாக மாற்றி வருகிறார்கள். பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் தாக்குதலும் விலை உயர காரணம். பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு  செய்யாமல் தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.  அமெரிக்க  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியை நோக்கி  சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

சிறிதளவு குறைகிறது… பெரிய அளவில் உயருகிறது…

தங்கம் விலை கடந்த 2 மாதமாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. மார்ச் 2ம் தேதி ஒரு சவரன் ரூ.32,040, 3ம் தேதி ரூ.32,300, 4ம் தேதி ரூ.33,024, 5ம் தேதி ரூ.32,976க்கும், 6ம் தேதி ரூ.33,760க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற வரலாற்று சாதனையை படைத்தது. 7ம் தேதி ஒரு சவரன் ரூ.33,656க்கு விற்கப்பட்டது. 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டு விடுமுறை நாளாகும்.

இதனால், சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. இந்த நிலையில் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு  (மார்ச்-9) நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. இதில் தங்கம் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.26 குறைந்து ஒரு கிராம் ரூ.4,181க்கும், சவரனுக்கு ரூ.208 குறைந்து ஒரு சவரன் ரூ.33,488க்கும் விற்கப்பட்டது.

 சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் அதிகப்படியாக உயர்வதும், குறைந்தால் மட்டும் சிறிதளவு குறைவது என்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் தங்கத்தின் விலை  (மார்ச்-10) இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.33,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ. 34. ஆயிரத்தை நெருங்கிவருவது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here