எஃப்.ஆர்.டி.ஐ (Financial Resolution and Deposit Insurance Bill) மிகவும் ஆபத்தான மசோதா என திரினாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்கிலுள்ள டெபாசிட் தொகையை, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் அனுமதி பெறாமல் வங்கியை நஷ்டத்திலிருந்து பாதுகாப்பதற்காக எஃப்.ஆர்.டி.ஐ (Financial Resolution and Deposit Insurance Bill) என்னும் மசோதா ஆகஸ்ட் 2017இல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் வங்கிகளில் சாதாரண வாடிக்கையாளர்கள் போட்டிருக்கிற 105 லட்சம் கோடி ரூபாய் பணம் இருக்கிறது. இதில் 70 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பொதுத்துறை வங்கிகளில் போடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான இந்தப் பணம் அவர்களுக்கில்லை என்று முடிவெடுக்க இந்த மசோதா வழி செய்கிறது.

இந்நிலையில் இந்த மசோதா மீதான அறிக்கை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக் கூறப்படுகிறது.

parliament

திரினாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (இன்று) நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பேசிய திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தெரக் ஓ பிரையன், இந்த மசோதா மிகவும் ஆபத்தானது என்றார்.

இதையும் படியுங்கள்: சிறுதொழில் தொடங்க வேண்டுமா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்