ஆன் லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

பதிவு செய்யப்படாத ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் காலாவதியான, போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரியும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் விதிகளை ஜனவரி 31க்குள் மத்திய அரசு அறிவிக்கவும், புதிய விதிகளின்படி விண்ணப்பித்து ஆன்லைன் நிறுவனங்கள் அனுமதி பெறவும் உத்தரவிட்ட தனி நீதிபதி, அதுவரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்தார்.

அதற்கு எதிரான ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தடையை தற்காலிகமாக நீக்கியதோடு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்