ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் விரக்தி; தீக்குளித்த 9-ஆம் வகுப்பு மாணவி

Kerala Education Minister C Raveendranath has sought a report from district-level education officials on this tragic incident

0
908

பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும் நிலையில்  ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தீக்குளித்து உயிரை விட்டுள்ளார். இந்த துயர சம்பவம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், ‘எங்கள் வீட்டில்  டிவி இருக்கிறது. ஆனால்  பழுதடைந்ததாக டிவி உள்ளது. அதனை ரிப்பேர் செய்து தருமாறு எனது மகள் என்னிடம் கூறினார். ஆனால் பழுது நீக்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எதற்காக உயிரை விட்டாள் என்று தெரியவில்லை. அவள் என்னிடம் சொல்லியிருந்தால், நண்பர் வீட்டிற்கு நான் அழைத்து சென்றிருப்பேன். அங்கிருந்து  அவரால்  பாடம் கற்றிருக்க முடியும்’ என்று தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்டவரின் தாய்க்கு சில  வாரங்களுக்கு முன்புதான் இன்னொரு குழந்தை பிறந்துள்ளது. 

மாணவியின் குடும்பம் வறுமையில்  இருப்பதாகவும், இதனால்  தன்னால் மேலும் படிக்க முடியாது என்று மாணவி கருதியதாகவும் அரசு அலுவலர்கள் NDTV யிடம் தெரிவித்துள்ளனர். டிவி அல்லது ஆன்லைன் மூலம் பாடம் கற்க முடியாததால் மாணவி மன உளைச்சலில் இருந்தார் என்றும் அவர்கள் கூறினர். 

9-ம் வகுப்பு மாணவியின் உயிரிழப்பு கேரளாவில்  அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார்.

பொது முடக்கம் காரணமாக கேரளாவில் ஜூன் 1-ம்தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. டிவி மூலமாகவும் பாடம் கற்பித்து தரப்படுகிறது. 

இருப்பினும் மாநிலத்தில் 2.50 லட்சம் அளவுக்கு மாணவ மாணவிகள் டிவி அல்லது இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்த முடியாத சூழலில்  இருக்கின்றனர். இதற்காக மையங்களை ஏற்படுத்தி தருவதற்கு அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 

கேரளாவில் மொத்தம் 1,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணம் அடைந்தவர்கள், மரணித்தவர்களை தவிர்த்து  மாநிலத்தில் தற்போது 708 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here