ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்படும் ஓலா, உபர் போன்ற ஆட்டோ சவாரிக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஓலா, உபர் ஆகிய வாகன சேவை இயங்கி வருகிறது. இதில் ஆட்டோ மற்றும் கார் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து மாறுபட்டு வருகிறது. இந்த சூழலில் ஓலா ,உபர் போன்றவைகளின் மூலம் ஆட்டோ பயணம் செய்யும் முறையானது தற்போது அதிகரித்து வருகிறது. காரணம் இது போன்ற செயலிகள் மூலம் ஆட்டோ சேவையை பெறும்போது ஆட்டோ ஓட்டுநர் உடன் எந்தவிதமான பேரமும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பேசுவதில்லை. அத்துடன் இது எளிதான முறையில் இருப்பதால் மக்கள் தற்போது இதை நாடி வருகின்றனர்.

அதேசமயம் நேரடியாக ஆட்டோவில் பயணம் செய்வது அல்லது ஆப்களின் மூலம் புக் செய்து பயணம் செய்வது ஆகிய இரண்டு ஆட்டோ சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்து இருந்தது.இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரும் ஆட்டோ சேவைக்கு மத்திய அரசு 5% ஜிஎஸ்டி வரியை விதித்து உள்ளது.

இந்த ஜிஎஸ்டி வரியானது வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆட்டோவில் பயணிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக பேசி ஆட்டோவில் பயணம் செய்வதற்கு ஜிஎஸ்டி விலக்கு நீடிக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய ஆன்லைனில் பதிவு செய்து ஆட்டோ சேவை நிறுவனங்களுக்கு பாதிப்பு உண்டாகும் என்றும் கட்டணம் உயரும் என்பதால் வாடிக்கையாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்றும் இத்துறையை சேர்ந்தவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here