ஆன்லைனில் பணம் அனுப்ப மூன்று முறைகள் உள்ளன. ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறைகளில் பணம் அனுப்பும் வாய்ப்பை அன்னைத்து வங்கிகளும் வழங்குகின்றன.

ஆன்லைனில் பணம் அனுப்ப மூன்று முறைகள் உள்ளன. ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறைகளில் பணம் அனுப்பும் வாய்ப்பை அன்னைத்து வங்கிகளும் வழங்குகின்றன. இந்த சேவைகளுக்கு வங்கிகள் 50 ரூபாய் வரை சேவை கட்டணமாக வசூலிக்கின்றன. இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். எந்த வங்கியில் எவ்வளவு கட்டணம் என்பதை இங்கே காணலாம்.

எஸ்.பி.ஐ ஆன்லைன் பண பரிவர்த்தனை:

10 ஆயிரம் ரூபாய் வரையிலான நெஃப்ட் பரிவர்த்தனைகளுக்கு எஸ்.பி.ஐ 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது. 10,000 முதல் 1 லட்சம் வரை 2 ரூபாய் + ஜி.எஸ்.டி, 1 லட்சம் – 2 லட்சம் வரை 3 ரூபாய் + ஜி.எஸ்.டி, 2 லட்சத்துக்கு மேல் 5 ரூபாய் + ஜி.எஸ்.டியும் வசூலிக்கப்படுகிறது. ஆர்.டி.ஜி.எஸ் பர்வர்த்தனைகளில், 2 -5 லட்சம் ரூபாய் வரை 5 ரூபாயும், அதற்கு மேல் 10 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எஸ்.பி.ஐ வங்கி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கிக் கிளை மூலம் பணம் அனுப்ப கட்டணம்:

வங்கிக் கிளையில் இருந்து நெஃப்ட் பரிவர்த்தனை செய்ய 10 ஆயிரம் ரூபாய்க்கு 2.5 ரூபாய்+ ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது. 10,000 முதல் 1 லட்சம் வரை 5 ரூபாய் + ஜி.எஸ்.டி, 1 லட்சம் – 2 லட்சம் வரை 15 ரூபாய் + ஜி.எஸ்.டி, 2 லட்சத்துக்கு மேல் 25 ரூபாய் + ஜி.எஸ்.டியும் வசூலிக்கப்படுகிறது. 5 லட்சத்துக்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு 50 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூல் செய்யப்படுகிறது. 1001 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1000 ரூபாய் வரையிலான ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.

பேங்க் ஆஃப் பரோடா:

ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு 15 ரூபாயும், 2 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 25 ரூபாய் வசூலிக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. 2 – 5 லட்சம் வரை காலை 8 மணி முதல் 11 மணி வரை பணம் அனுப்ப, ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைக்கு 25 + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. காலை 11 மணி முதல் 1 மணி வரை 27 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு மணிக்கு மேல் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

info

ஹெ.டி.எஃப்.சி ஆனலைன் பரிவர்த்தனைகள்:

ஆன்லைனில் நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைகளுக்கு ஹெச்.டி.எஃப்.சி எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.

ஹெச்.டி.எஃப்.சி வங்கிக் கிளையில் பரிவர்த்தனைக்கு:

10,000 வரையிலான நெஃப்ட் பரிவர்த்தனைக்கு 2.5+ ஜி.எஸ்.டி, அதற்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

2-5 லட்சம் வரையிலான, ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. 5 லட்சத்துக்கு மேல் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஹெச்.டி.எஃப்.சி ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனை:

ஒரு லட்சம் வரையிலான பரிவர்தனைக்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி. 1-2 லட்சம் வரை 15 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி:

10 ஆயிரம் ரூபாய் வரை நெஃப்ட் பரிவர்த்தனை செய்ய 2.5 ரூபாய் + ஜி.எஸ். டி கட்டணம். 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை 5 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணம். 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை 15 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணமாகும். அதற்கு மேல், 10 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்.டி.ஜி.எஸ் பொருத்தவரை 25+ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5-10 லட்சம் வரை 50 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.

ஒரு லட்சம் வரையிலான ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூல் செய்யப்படுகிறது. ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை 15 ரூபாயும், ஜி.எஸ்.டியும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

Courtesy : ndtv tamil

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here