ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு இது மிகச்சிறந்த அப்டேட் ஆக இருக்கும் என்கிறது வாட்ஸ்அப்.

ப்டேட் செய்யும் முயற்சியில் வாட்ஸ்அப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயனாளர்கள் புகைப்படங்களைப் பகிரும் போது மாற்றி வேறு ஒருவருக்கு அனுப்பிவிடாமல் இருக்க புதிய அப்டேட் ஒன்றை வடிவமைக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. புகைப்படங்களை கான்டாக்ட் லிஸ்டில் உள்ள ஒருவருடன் ஷேர் செய்ய நின்னைக்கும்போது வேறு ஒருவருக்கு மாற்றி அனுப்பிவிடாமல் பயனாளரை அலார்ட் செய்யும்.

தற்போதைய வாட்ஸ்அப் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோ ஷேர் செய்யும்போது, நாம் யாருக்கு ஷேர் செய்கிறோமோ அவரது டிஸ்ப்ளே புகைப்படம் ஒரு சின்ன ஐகான் ஆகவே இருக்கும். இது பயனாளர்களைச் சில நேரங்களில் குழப்பமடையச் செய்யும்.

ஆகவே, ஃபோட்டோ ஷேரிங் அனுபவத்தை மேலும் மெருகேற்றும் முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு இந்த அப்டேடட் அம்சம் பயன்பாட்டுக்கு வரும். ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு இது மிகச்சிறந்த அப்டேட் ஆக இருக்கும் என்கிறது வாட்ஸ்அப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here