ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

0
423

தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக் கூடும்  இதன்காரணமாக நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரியில் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் என கூறியுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை சற்று தொய்வடைந்த நிலையில் இருந்தது, இன்றுஉருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here