• தயாரிப்பு நேரம்     20 min 
 • சமைக்கும் நேரம்   30 min 
 • ஆயத்த நேரம்          50 min 
 • பரிமாறும் அளவு     

ஆந்திரா மட்டன் சுக்கா வறுவல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் ருசிக்கலாம் வாங்க.

சமைக்க தேவையானவை

 •  மட்டன் – 350 கிராம்
 •  தக்காளி – 1
 •  மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
 •  இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
 •  மசாலாதூள் – 3 தேக்கரண்டி
 •  மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
 •  பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 2 அல்லது சின்ன வெங்காயம் – 30
 •  பூண்டு(பொடியாக நறுக்கியது) – 5 பல்
 •  தேங்காய் துருவியது – 2 மேசைக்கரண்டி
 •  சோம்பு – 1 தேக்கரண்டி
 •  கசகசா – 1 தேக்கரண்டி அல்லது முந்திரிபருப்பு – 5
 •  பட்டை – 2 துண்டு
 •  கருவேப்பிலை – சிறிது
 •  கிராம்பு – 2
 •  பிரியாணி இலை – 1
 •  சோம்பு – 1 தேக்கரண்டி

ஆந்திரா மட்டன் சுக்கா வறுவல் செய்முறை : 

1.

முதலில் மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய், 2 மேசைக்கரண்டி வெங்காயம், சிறிது பூண்டு சேர்த்து வதக்கவும்.

2.

மட்டன் துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.மல்லித்தூள், 1 தேக்கரண்டி மசாலாதூள், பாதி உப்பு , ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

3.

மட்டன் சரியாக இல்லையென்றால் 1 /2 கப் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

4.

குக்கரை மூடி வேக விடவும்.குக்கரில் இருந்து ஆவி வரும்போது, குறைந்த சூட்டில் அடுப்பை வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

5.

கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவொன்றாகச் சேர்க்கவும்.

6.

பின் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

7.

குக்கரை திறந்து மட்டன் துண்டுகளைதனியாக வடித்து எடுத்து வைக்கவும்.மட்டனில் இருந்து வடித்து வைத்த தண்ணீரைவதங்கிக் கொண்டிருக்கும் மசாலாவில் ஊற்றி குழம்பு திக்ககும் வரை வதக்கவேண்டும்.கடைசியாக வேக வைத்த மட்டன் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here