சமைக்க தேவையானவை :

கத்தரிக்காய் – கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
வறுத்து அரைக்க: வேர்க்கடலை – 2 தேக்கரண்டி
எள்ளு – 2 தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று
வெந்தயம் – அரை தேக்கரண்டி
தனியா – 2 தேக்கரண்டி
கொப்பரைத் துருவல் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கசகசா – ஒரு தேக்கரண்டி

bagara baingan-620

பகாரா பைகன் செய்முறை :

1. கத்தரிக்காயைக் கீறி வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதுடன் தூள் வகைகள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து வைக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

2. வெறும் வாணலியில் வறுக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்து, ஆறவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும்.

3. அத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது கலவையைச் சேர்த்துக் கிளறிவிடவும். வதக்கிய கலவையுடன் புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கெட்டியானதும் இறக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here