ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி அம்மாநிலம் முழுவதும் இன்று (ஏப்.15) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய பொது பட்ஜெட்டின்போது, ஆந்திர மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை. மேலும், கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அதனை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேச கட்சி விலகியது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில், ஆந்திர எம்.பி.க்கள் தொடர் அமளி மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

bus

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று (ஏப்.16) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றிற்குத் தீவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்