ஆதித்ய வர்மா… துருவ்வின் அப்பாவாக நடிக்கும் கௌதம்?

0
110

அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் துருவ்வின் அப்பாவாக கௌதம் நடிக்கலாம் என்கின்றன தகவல்கள்.

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த தெலுங்குப் படம் அர்ஜுன் ரெட்டியை தமிழில் விக்ரம் மகன் துருவ் நடிக்க பாலா இயக்கினார். வர்மா என்ற பெயரில் தயாரான அந்தப் படம் தங்களுக்குப் பிடிக்கவில்லை என தயாரிப்பு தரப்பு நிராகரித்தது. படத்தை வெளியிடப் போவதில்லை என்று சொன்னதுடன் அதே படத்தை மீண்டும் எடுப்பதாக அறிவித்தது. நாயகன் துருவ் தவிர அனைவரும் மாற்றப்பட்டனர். வர்மா என்ற பெயரையும் ஆதித்ய வர்மா என்று மாற்றினர். நாயகியாக இந்தி நடிகை பினிட்டா சந்து ஒப்பந்தம் செய்யப்பட்டார். அர்ஜுன் ரெட்டியின் முதன்மை உதவியாளர் க்ரிஷய்யா படத்தை இயக்குகிறார்.

லேட்டஸ்ட் தகவல், துருவ்வின் அப்பாவாக நடிக்க கௌதம் வாசுதேவ மேனனை கேட்டிருக்கிறார்கள். அர்ஜுன் ரெட்டியில் நாயகனின் அப்பாவாக மகேஷ் பாபுவின் மைத்துனர் நடித்திருந்தார். அந்த வேடத்தில் நடிக்க கௌதம் சம்மதித்தாரா இல்லையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here