ஆதார் அடையாள அட்டை பாதுகாப்பு தொடர்பாக செய்தி வெளியிட்ட ’தி ட்ரிப்யூன்’ செய்தி நிறுவனத்தின் நிருபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள், எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆதார் அடையாள அட்டையில் உள்ள தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும், எந்த வகையிலும் யாரிடமும் பகிரப்படாது என மத்திய அரசு, தொடந்து வாக்குறுதி அளித்து வரும்நிலையில், இது தொடர்பான செய்தி ’தி ட்ரிப்யூன்’ இதழில் வெளியாகியிருந்தது. அதில், 500 ரூபாய் செலுத்தினால் 10 நிமிடங்களில் மற்றவர்களின் ஆதார் தகவல்கள் கிடைப்பதாக கடந்த ஜன.3ஆம் தேதியன்று செய்தி வெளியாகியிருந்தது. பணம் கொடுத்தால் குறிப்பிட்ட நபரின் பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும் எனவும், ஆதார் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தையும் அது எழுப்பியிருந்தது.

இதனையடுத்து தவறான செய்தி வெளியிட்டதாக ’தி ட்ரிப்யூன்’ இதழ் மற்றும் அதன் செய்தியாளர் ரச்சனா கைரா மீது, தேசிய தனிநபர் அடையாள (Unique Identification Authority of India -UIDAI) ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்திய தண்டனைச் சட்டம் 420, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எடிட்டர்ஸ் கில்ட் (செய்தி ஆசிரியர்கள் அமைப்பு) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் நலனுக்காக புலலாய்வு செய்து செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என்றும், பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: மனச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை எண்ணம் வருகிறதா உங்களுக்கு ? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here