ஆதார் கார்டில் போட்டோவை மாற்றும் வழிமுறைகள்

0
289

ஆதார் கார்டில், முகவரி உள்ளிட்டவைகளை மாற்றியமைப்பது போல், போட்டோவையும் மாற்றலாம். ஆனால், ஆன்லைனில் மாற்ற இயலாது.

ஆதார் கார்டில் உள்ள போட்டோ, எல்லோருக்கும் சரியாக அமைந்திருப்பதில்லை. 

ஆதார் கார்டில், முகவரி உள்ளிட்டவைகளை மாற்றியமைப்பது போல், போட்டோவையும் மாற்றலாம். ஆனால், ஆன்லைனில் மாற்ற இயலாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆதார் என்ரோல்ட்மென்ட் மையங்களுக்கு சென்று, தேவையான விபரங்களை அளித்து போட்டோவை மாற்றிக்கொள்ளலாம்.

1. ஆதார் என்ரோல்ட்மென்ட் மையத்திற்கு செல்லவும்
2. UIDAI இணையதளத்திலிந்து படிவத்தை பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்யவும்.
.3 இந்த படிவத்துடன் உங்களுடைய பயோமெட்ரிக் விபரங்களையும் அளித்தால், அந்த மையத்தின் ஊழியர் , உங்களை போட்டோ எடுப்பார்.
4. உங்கள் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்
5. இது கட்டணச்சேவை என்பதால், இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
6. உங்களுக்கு ஒரு உறுதி எண்ணுடன் கூடிய ரசீது வழங்கப்படும்.
7. இந்த எண்ணை வைத்து, தங்கள் கோரிக்கையின் நடப்பு விபரத்தை அறியலாம்.
உங்கள் ஊரில், இந்த ஆதார் என்ரோல்ட்மென்ட் மையம் இல்லையெனில், UIDAI இணையதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கி, போட்டோ உள்ளிட்ட தேவையான பயோமெட்ரிக் விபரங்களை நிரப்பி,

UIDAI Regional Office
Khanija Bhavan,
No. 49, 3rd Floor,
South Wing Race Course Road,
Bangalore – 560 001

என்ற முகவரிக்கு அனுப்பியும், ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்றியமைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here