புதிய வங்கிக் கணக்கு துவங்க ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு, ஆதார் அட்டையை அனைத்து திட்டங்களுக்கும், பணப் பரிவர்த்தனை தொடர்பான சேவைகளுக்கும் கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில், வங்கிகளில் புதிய கணக்கு தொடங்கவும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, புதிய வங்கி கணக்கு தொடங்கவும், ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய ஆதார் எண் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு செல்லாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : குழந்தைகள் முன் சண்டை போடக் கூடாது – கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்