ஆண்மை அதிகரிக்கச் செய்யும் அம்மான் பச்சரிசிக் கீரை சத்துமாவு

0
767

அம்மான் பச்சரிசிக் கீரை சத்துமாவு

தேவையான பொருட்கள்

அம்மான் பச்சரிசிக் கீரை – 200 கிராம்                     
(நிழலில் உலர்த்தியது)
கசகசா – 50 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
கடலைப் பருப்பு – 50 கிராம்
உடைத்த கடலை – 50 கிராம்
முந்திரிப் பருப்பு – 50 கிராம்
பாதாம் பருப்பு – 50 கிராம்
உளுந்து – 50 கிராம்
கொண்டைக் கடலை – 50 கிராம்
ஜவ்வரிசி –  50 கிராம்
பசுநெய் – 100 கிராம்
ஏலக்காய் – 25 கிராம்

செய்முறை : வாணலியில் பசுநெய்யை ஊற்றி அம்மான் பச்சரிசிக் கீரையை தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்பு அம்மான் பச்சரிசிக் கீரையை தனியாக வறுத்து மற்ற பொருள்களுடன் சேர்த்து பொடியாக்கி வைத்துக் கொளாளவும்.

பயன்கள் : இந்த சத்து மாவுவை அடிக்கடி கஞ்சியாக காய்ச்சிக் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும் மேலும் ஆண்மை எழுச்சியையும் அதிகரிக்கும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here