பொதுவாகவே கீரை வகைகளை சமைத்து உண்ணும் போது அதிலிருந்து நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும் அல்லவா..?

இன்றளவும் கிராமங்களில் உள்ள பெரியவர்கள் மட்டுமே கீரைகளில் உள்ள சத்துக்கள் குறித்த முழு உணர்வோடு விரும்பி உண்கின்றனர். சிட்டி வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு வேண்டும் என நினைப்பார்கள் தவிர.. அது கீரைகளிலும் உள்ளது என்பதை அந்த அளவிற்கு உணர்ந்து இருக்க மாட்டாரகள்..

இது ஒரு பக்கம் இருக்க, ஆண்மைக்கும் இந்த வெந்தய கீரை எந்த அளவிற்கு உகந்தது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.இந்த இலைகளை பரோட்டா முதல் சப்ஜி வரை உணவு டிஷ்களில் பயன்படுத்துகின்றோம். வெந்தய இலைகளை நாம் எடுத்துக்கொள்வதால், செரிமானம் மிக சிறப்பாக இருக்கும்.

இதில் உள்ள நார்ச்சத்து, புரோட்டின் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தேவையான இன்சுலின் அளவை சீராக சுரக்க உதவி செய்கிறது.

உடலில் உள்ள தேவை இல்லாத கொழுப்பை வெளியேற்றுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி, நல்ல கொலஸ்ட்ராலை வைத்துக்கொள்கிறது. தாய்ப்பால் சுரப்பிற்கும் வெந்தய கீரை மிகவும் நல்லது. வெந்தய கீரையை தொடர்ந்து உண்டு வந்தால், மலசிக்கல் வாயு தொல்லை, வயிற்றுப்புண் உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் மிக விரைவாக நன்றாகி விடும்.

நம் உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். இதே போன்று, ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்க செய்கிறது வெந்தய கீரை. வெந்தய கீரையை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், அவர்களுக்கு இதயநோய் வராமல் தடுக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here