சேமிப்பகம் (storage space) நிறைந்ததாக அறிவிப்பு வரும்போது அப்படி என்ன தான் இடத்தை அடைக்கிறது என்று நாம் அனைவரும் யோசிப்பதுண்டு. இடத்தை சுத்தப்படுத்த சில வழிகள் இதோ:-

001

1. தேவையில்லாத செயலிகளை நீக்கவும் – செயலிகள் அதிகமான இடத்தை எடுத்துக்கொள்ளும். முதலாவதாக நீங்கள் செய்யவேண்டியது நெடு நாட்களாக பயன்படுத்தாத செயலிகளை நீக்குவது தான்.

002

2. ’ஃப்ரீ அப் ஸ்பேஸ்’ அம்சத்தை பயன்படுத்தவும் – நீங்கள் ஆண்ட்ராய்ட் ஓரியோ பயன்படுத்துபவராக இருந்தால் அதிலுள்ள ஒரு அம்சத்தைக்கொண்டு தேவையில்லாத தரவுகளை எளிதாக நீக்கலாம். ‘ஸெட்டிங்ஸ்’ (Settings) சென்று ‘ஸ்டோரேஜ்’ (Storage) தேர்ந்தெடுத்து அதிலுள்ள ’ஃப்ரீ அப் ஸ்பேஸ்’ (Free up Space)என்ற அம்சத்தை பயன்படுத்தி தேவையில்லாத பொருட்களை தேர்வு செய்து நீக்கலாம்.
003

3. புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பாடல்களை நீக்குங்கள் –அடுத்தபடியாக அதிக இடம் எடுத்துக்கொள்வது புகைப்படங்களும் காணொளிகளும் தான். எனவே தேவையானவற்றை வைத்துகொண்டு தேவையில்லாதவற்றை நீக்கிவிடுங்கள். மேலும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பாடல்களை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் சேமித்து வைத்திருந்தால் அதற்கு மாற்றாக ‘கானா’ போன்ற ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தலாம்.

4. தரவுகளை சேமிக்க ’கிளௌட்’ (Cloud) பயன்படுத்தவும் – கோப்புகளை சேமிக்க கிளௌட் சேவைகளை பயன்படுத்தி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அவற்றை நீக்கிவிடலாம். உதாரணத்திற்கு, கூகுள் ஃபோட்டோஸில் புகைப்படங்களை இலவசமாக சேமிக்கலாம். கூகுள் ட்ரைவ் (google drive), டிராப்பாக்ஸ் (DropBox), ஒன்ட்ரைவ் (One Drive) போன்ற சேவைகளை பயன்படுத்தி தரவுகளை பதிவேற்றலாம்.

5. ’கேச்சே’வை (Cache) நீக்கவும் – உடனடியாக இடத்தை சுத்தப்படுத்த உங்கள் ஃபோனிலுள்ள கேச்சேவை நீக்கலாம். ஆனால் ஸ்மார்ட்ஃபோன் சுமூகமாக வேலைசெய்ய கேச்சே தேவை என்பதை நினைவில் கொள்ளவும். கேச்சேவை நீக்க – ஸெட்டிங்>ஸ்டோரேஜ்>கேச்சே டேட்டா (Setting> Storage> Cache Data)

003

6. ஸ்மார்ட்ஃபோனை மீட்டமைக்கவும் – மேற்கண்ட எந்த வழிகளும் பலனளிக்கவில்லை என்றால் ‘ஃபேக்டரி ரீசெட்’ (Factory Reset) செய்வதன் மூலம் தேவையற்ற துகள்களோடு அனைத்து தரவுகளையும் துடைத்தெறியலாம். ஆனால் அதை செய்யும் முன் உங்களுக்கு தேவையான தரவுகளை வேறெங்காவது சேமித்து வைத்துக்கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here