ஆண்ட்ராய்டு 11 பீட்டா 1 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்

Xiaomi has released the Android 11 Beta 1 build for Redmi K30 Pro users in China. The development comes days after another Xiaomi sub-brand, Poco announced the Android 11 beta 1 build for Poco F2 Pro.

0
111

சீன சந்தையில்வெளியிடப்பட்டுள்ளஆண்ட்ராய்டு 11 பீட்டா 1, ஜியோமி நிறுவனம் தனது ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கும் இந்த அப்டேட் வெளியிடப்பட்டது.

இரு ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கப்படும் ஆண்ட்ராய்டு 11 பீட்டா1-ல் ஜியோமியின் MIUI இன்டர்ஃபேஸ் வழங்கப்படவில்லை. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட்(AOSP) சார்ந்து இயங்குகிறது.

புதிய அப்டேட் பற்றிய விவரங்களை ஜியோமி தனது வெய்போ அக்கவுண்ட்டில் அறிவித்தது. டெவலப்பர்களுக்கான ஆண்ட்ராய்டு 11 பீட்டா மூலம் டெவலப்பர்கள் தங்களது செயலி புதிய ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் சீராக இயங்க வைக்க முடியும் என ஜியோமி தெரிவித்துள்ளது. 

மேலும் புதிய அப்டேட் செய்யும் முன் வாடிக்கையாளர்கள் தங்களின் தரவுகளைப் பேக்கப் செய்து கொள்ளவும் ஜியோமி எச்சரிக்கை விடுத்துள்ளது. எம்ஐ கம்யூனிட்டி வலைதளத்தில் இருந்து.tgz எனும் எக்ஸ்டென்ஷன் ஃபைலினை டவுன்லோடு செய்வதன் மூலம் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் புதிய ஆண்ட்ராய்டு 11 பீட்டா 1 பதிப்பை இன்ஸ்டால் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here