ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்

Nokia 1 was launched back in February of 2018 and comes with 1GB of RAM, 8GB of storage, and single rear camera.

0
161

இந்தியாவில்  ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தால் மார்ச் 2018 இல் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 1 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ கோ எடிஷன் இயங்குதளம் கொண்டிருந்தது.

புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஸ்மார்ட்போனிற்கு கூடுதல் பாதுகாப்பு, தனியுரிமை அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் டார்க்தீம், பிரத்யேக பிரைவசி அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 

இந்தியா மட்டுமின்றி பல்வேறு இதர நாடுகளிலும் வழங்கப்படும் இந்தப் புதிய அப்டேட் 859 எம்பி அளவில் இருக்கிறது. புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 10 அம்சங்கள் மற்றும் ஜூன் 2020 செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வரும் நாட்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா1 மாடலை தொடர்ந்து நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் அப்டேட் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2019 ஜூன் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here