பாரதிய ஜனதா கட்சியின் ஆண்டு வருமானம் 81 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக ஜனநாயகத்திற்கான சீர்த்திருத்த அமைப்பு கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய கட்சிகளின், 2015-16 மற்றும் 2016-17ஆம் ஆண்டிற்கான வருமானம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஜனநாயகத்திற்கான சீர்த்திருத்த அமைப்பு (Association of Democratic Reforms – ADR) ஆய்வு நடத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கடந்த 2015-16ஆம்ஆண்டு மற்றும் 2016-17ம் ஆண்டுகளுக்கிடையே பாஜகவின் வருமானம் 81.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு 570.86 கோடி ரூபாயாக இருந்த பாஜகவின் வருமானம், கடந்த 2016ஆம் ஆண்டில் 1034.27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் 14 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு 261.56 கோடி ரூபாயாக இருந்த காங்கிரசின் வருமானம், கடந்த 2016ஆம் ஆண்டு 225.36 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திரினாமுல் காங்கிரஸ் கட்சி ஆகிய ஏழு கட்சிகளின் 2016-17ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த வருவாய் 1,559.17 கோடி ரூபாய் என்றும், அதேபோன்று ஏழு கட்சிகளின் ஒட்டுமொத்த செலவு 1,228.26 கோடி ரூபாய் எனவும் தேர்தல் ஆணையத்தில் கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ’15 பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here