லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து – இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள்(வியாழக்கிழமை) ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது நாளில் டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் . புஜாரா ஒரு ரன்னில் அவுட்டானார். இதனால் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது.

அடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஆண்டர்சன், சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே உடன் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்

மத்திய இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பிரியா ரமணிக்கு பெண் பத்திரிகையாளர்கள் 20 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரமணி தரப்பில் முன்வைக்கப்படும் வாக்குமூலத்துக்கு நீதிமன்றம் செவிமடுக்க வேண்டும்...

மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு எத்தனை மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தேவைப்படும்? என்பன தொடர்பான விவரங்கள் எதுவும் தங்களது வசம் இல்லை என்று என...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக புதன்கிழமை முதல்முறையாக திறக்கப்படுகிறது. இதனிடையே, சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும்...

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்