கோவில்களுக்குள் வரும் பெண்களுக்கு மாதவிடாய் ஆகிறதா? இல்லையா? என கண்டுபிடிக்கும் கருவி வரும் வரை பெண்களை அனுமதிக்கக்கூடாது என சபரிமலை தேவஸ்தான தலைவர் பிரயார் கோபால கிருஷ்ணன் கூறினார். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் குறித்து பெண்களே பேசுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். மாதவிடாய் ஒரு பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாற்றத்தை சுட்டிக்காட்டி அவளை ஒதுக்கி தீண்டத்தகாதவளாக்கும் ஒன்றாகவே உள்ளது. மாதவிடாய் ஏன் தோன்றுகிறது? எப்படி ஏற்படுகிறது? என்பதை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதை இரு பெண்களே காமெடியாக சொல்கிறார்கள். பாருங்கள்.

ஏன் பெண்களுக்கு மாதவிடாய் தோன்றுகிறது? இந்தக் கேள்வியை பெண்களிடம் கேட்டால் ’திரு திரு’வென முழிப்பார்கள். இந்த வீடியோவில் உள்ள பெண்களும் அதை பிரதிபலிக்கின்றனர். பின்பு, மெல்ல அதற்கான விடையைத் தருகின்றனர்.

அதிலிருந்து சில…

-பெண்களுக்கு இரண்டு கருப்பைகள் உள்ளன. இந்த இரண்டு கருப்பைகளும் மாதத்திற்கு ஒருமுறை வலுவாக மோதிக்கொள்ளும். இந்த கருப்பைகள் கருப்பை சுவரில் மோதிக்கொள்ளும்.

-இந்த மோதலில்தான் கருப்பையில் இருந்த ரத்தம் வரத்தொடங்கும்.

-மாதவிடாய் என்றாலே நமக்கு மூன்று நாட்கள்தான் என நமது தமிழ் சினிமாவும், சமூகமும் சொல்லி வைத்திருக்கிறது. ஆனால், இந்த கால அளவு ஒவ்வொரு காரணிகளைப் பொறுத்து ஏழு நாட்கள் வரை கூட நீடிக்கும்.

-மாதவிடாய் ஏற்படும்போது கடுமையான வலி அடிவயிற்றில் ஏற்படும். இது பெண்களுக்கு உடல், மன ரீதியாக சோர்வை ஏற்படுத்தும். எரிச்சல் அடைவார்கள். அந்த நேரத்தில் யார், எதை செய்ய சொன்னாலும் முழு உடன்பாட்டோடு செய்ய முடியாது.

-கர்ப்ப காலங்களில் மாதவிடாய் ஏற்படாமல் கருப்பைகள் சமாதானத்துடன் இருக்கும். அதனால்தான், அந்த காலக்கட்டத்தில் மாதவிடாய் ஏற்படுவதில்லை. அப்பொழுது கருப்பை பெரிதாக இருக்கும். கருப்பை பெரிதாகுவதால்தான் குழந்தையை தாங்க முடிகிறது.

-வயது முதிர்ந்த பின்பு பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது நின்றுவிடும். அதற்கு பெயர்தான் ‘மெனோபாஸ்’.

நன்றி: IISuperwomanII

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here