உடுமலைப்பேட்டையில் காதல் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண்டைந்தார்.

உடுமலைப்பேட்டையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சங்கர் என்பவர், கவுசல்யா என்ற வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதியன்று உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சங்கர் மற்றும் கவுசல்யா மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் சங்கர் உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள் : அவசரம் வேண்டாம், சின்னசாமிகளே!

இந்த வழக்கு தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நிதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை மார்ச் மாதம் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பதுங்கியிருந்த குற்றவாளிகள் ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்து திருப்பூர் மாவட்ட நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தினர். கைதான அனைவரையும் 14 நாட்கள் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் கவுசல்யாவின் உறவினரான பிரசன்னா என்பவர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதையும் படியுங்கள் : “நான் உயர்சாதி; ஆணவக்கொலைகளை எதிர்ப்பவள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்