“ஆட்டோக்காரர்ர்ன்னா இளக்காரமா?”ன்னு கேட்டதுக்கு

‘ஆட்டோக்காரன்னா அவ்ளோ யோக்கியமா’ ன்னு அக்னி ஏவுகணையாய் பாய்ஞ்சுட்டாங்க, எங்க எடிட்டர் நந்தினி. ஆட்டோ டிரைவருக்கும் ஆட்டோ பயணிகளுக்குமான சண்டயின்றது, ஆட்டோ கண்டுபிடிச்ச காலத்துல இருந்தே நடந்துக்குனு இருக்குது. “கையில வாங்குன பையில போடல காசு போன எடம் தெரியல…”ன்னு இரும்புத்திரை படத்துல நடிகர் தங்கவேலு பாடுற பாட்டாட்டம்தான் இருக்குது; நம்ம நடுத்தர மக்களோட வாழ்க்கப் பாடும்.

ரொம்ப சீரியசா மீட்டரப்பத்தி பேசுனா நானும் சூடாயிடுவேன் நீங்களும் சூடாய்யிடுவீங்க. என்னத்தான் சூடு மீட்டர ஒழிச்சாலும், சூடாவுற மேட்டர மட்டும் தீர்க்கறதுக்கு இங்க யாரும் ரெடியா இல்ல. ‘விஸ்வநாதன் வேல வேண்டும்’ன்ற மாதிரி எல்லோரும் ஆட்டோக்காரங்ககிட்ட “மீட்டரப் போடுன்னு” சவுண்டு வுடுற இந்தக் காலத்துல முந்தா நேத்து பாக்குறன்; தி.நகர்ல ஆர்.டி.ஓ ஆபிசரு… “ஆட்டோ கட்டணக் கொள்ளயத் தடுக்க புகார் நெம்பர்ன்னு” போற வர்ற ஆட்டோவயெல்லாம் மடக்கி ஸ்டிக்கர் ஒட்டிக்குனு கீறாரு.

இன்னாடாயிது, எல்லா ஆட்டோவும்தான் மீட்டர் போட்டு ஓட்டுறாங்களே திடீர்ன்னு அதிக கட்டணக் கொள்ளய தடுக்கப் புகார்ன்னு புதுசா ஒரு கத வுடுறாங்களே இன்னாடான்னு யோசிச்சுக்குனே வேலைக்கு வந்துட்டேன்.

அய்ய.. வுங்களுக்கு தெரியாதா.? நான் ஆட்டோ ஓட்டுறத வுட்டுட்டு ஒரு கம்பெனியில வேலைக்குச் சேர்ந்துட்டேன். இப்போ நிம்மதியா இருக்குறேன். சந்துக்குச் சந்து ஷேர் ஆட்டோ, ஷேர் ஆட்டோவ விட ச்சீப்பா, விலையில்லா ஆடு, மாடாட்டம் கால் டாக்ஸிங்க வந்துடுச்சு. எல்லாரும் ஜம்முன்னு ஏஸி கார்ல போறாங்கோ, அப்புறம் எப்படி ஆட்டோவுல ஏறுவான்? அதான் நாளயும் பொழுதையும் வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு வேலைக்கு வந்துட்ட…ன்.

ஆட்டோக்காரனெல்லாம் கொள்ளக்காரனுங்கன்னு ஊரு சாப்பன வேற. அர்ஜண்ட்டுக்கு கூட, கை மாத்தா யாரும் கடன் குடுக்க மாட்றாங்கோ., வூட்ல இன்னா கேக்குறாங்க தெரியுமா..? காலியில போன நைட்டு பத்து மணிக்கி வர்ற வெறும் 300, 400 தான ஓட்டுனன்னு கேக்குறாங்க. ரோட்டுல வந்தா மீட்டரு சண்ட, வூட்டலப் போன அன்னாடம் சண்ட இன்னாத்தான் பண்றது சொல்லுங்கோ..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here