ஆட்டு மூளை பொரியல் சமைக்க தேவையானவை :

  •  ஆட்டு மூளை — 2என்னம்
  •  மஞ்சள்தூள் — 1/2 டீஸ்பூன்
  •  மிளகாய்தூள் — 1 1/2 டீஸ்பூன்
  •  வெங்காயம் — 1/2 கப்
  •  சோம்பு — 1/2 டீஸ்பூன்
  •  எண்ணைய் — 3 ஸ்பூன்
  •  உப்பு — தே.அ

ஆட்டு மூளை பொரியல் செய்முறை :

·         Step 1.

முதலில் ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி பின்பு ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். பிறகு அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

·         Step 2.

இப்பொழுது மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள் , மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவேண்டும் .பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

·         Step 3.

வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் சோம்பை நைத்துப் போட்டு சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.

·         Step 4.

பின்னர் பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் கொட்டி மிகவும் மெதுவாக கிளறவேண்டும். நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம். ஆட்டு மூளை பொரியல் ரெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here