மஜத எம்எல்ஏவை பாஜகவில் இணைக்க எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான தொலைபேசி உரையாடல் விவகாரத்தில், தனது தவறை ஒப்புக் கொண்ட எடியூரப்பா எந்தவிதமான விசாரணைக்கும் தயார் என்றும் கூறியுள்ளார்.

மஜத எம்எல்ஏ நாகனகௌடாவின் மகன் சரண்கௌடாவுடன் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேரம் பேசியது தொடர்பான ஆடியோ கிளிப்பை வெளியிட்டபோது, அது உண்மையானால் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார். மேலும், தனது குரலை போலியாகத் தயாரித்து ஆடியோ கிளிப்பை வெளியிட்டதாக எடியூரப்பா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், நாகனகௌடாவின் மகன் சரண்கௌடாவுடன் தான் பேசியது உண்மைதான் என்று எடியூரப்பா ஒப்புக் கொண்டிருக்கிறார்.இதன்மூலம் தனது தவறை எடியூரப்பா ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து பேசிய எடியூரப்பா, குமாரசாமி மூன்றாம் தரமான அரசியலில் ஈடுபடுகிறார். நான் நாகனகௌடாவின் மகன் சங்கர்கௌடாவுடன் பேசியது உண்மைதான். குமாரசுவாமிதான் அவரை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறார். அதன்பிறகு தனக்கு தேவையானதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். சில உண்மைகளையும் அவர்கள் மறைத்துள்ளார்கள் என்றார்.

மேலும் குமரசுவாமி பணம் குறித்து பேசிய விவரங்களையும் நாங்கள் வெளியிடுவோம் என்றும் நான் எல்லாவிதமான விசாரணைக்கும் தயார் என்றும் எடியூரப்பா கூறினார்.

எடியூரப்பா தன் தவறை ஒத்துக் கொண்டிருப்பது குமாரசாமியின் ஆட்சியை காப்பாற்றியிருக்கிறது, மேலும் மக்களவைத் தேர்தலுக்குமுன் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற பாஜகவின் கடைசி அரசியல் சூழ்ச்சியையும் வீழ்த்தியிருக்கிறது. தேசிய அளவில் பாஜகவுக்கு பெரிய தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here