ஆச்சரியம் தரும் முட்டைக்கோஸ் நன்மைகள்!

Highlights
* உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் சாப்பிடலாம்
* முட்டைக்கோஸ், உடல் நச்சுக்களை நீக்க பயன்படுகிறது
* சிலிகான், சல்பர் சத்துக்கள் முட்டைக்கோஸில் இடம் பெற்றுள்ளன

வைட்டமின் ஏ,பி1,பி2, பி6,இ,சி,கே, கால்சியம், ஐயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற மினரல்ஸ் முட்டைக்கோஸில் இடம் பெற்றுள்ளன. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கும் முட்டைக்கோஸ், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. முட்டைக்கோஸ் பயன்படுத்து பொறியல், குழம்பு, ஜூஸ் போன்ற உணவு வகைகளை சமைக்கலாம். முட்டைக்கோஸின் குனநலன்கள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

1. உடல் எடை குறைக்க

அதிக வைட்டமின், நார்ச்சத்து உள்ள முட்டைக்கோஸ் உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும், குறைந்த கலோரி அளவை கொண்டுள்ளதால் உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் காய்கறியை சாப்பிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


2. உடல் நச்சு நீங்க

முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி, சல்பர் ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க பயன்படுகிறது. முட்டைக்கோஸில் உள்ள ‘இண்டோல் 3 கார்பனைல்’ என்ற சத்து, கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கி ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

3. இரத்த சர்க்கரை அளவு

சிவப்பு முட்டைக்கோஸில் உள்ள பெடாலெயின்ஸ், உடல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முட்டைக்கோஸ், பிரக்கோலை, கீரை போன்ற காய்கறி வகைகள் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.


4. ஆரோக்கியமான சருமம்

‘பியூட்டி மினரல்ஸ்’ என்றழைக்கப்படும் சிலிகான், சல்பர் சத்துக்கள் முட்டைக்கோஸில் இடம் பெற்றுள்ளன. இதனால், முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் நீங்க முட்டைக்கோஸ் சாப்பிடலாம்.

முட்டைக்கோஸில் ஊட்டச்சத்துக்கள்

100 கிராம் முட்டைக்கோஸில், 0.10 கிராம் கொழுப்பு, 18 மில்லி கிராம் சோடியம், 170 மில்லி கிராம் பொட்டாசியம், 5.8 கிராம் கார்போஹைட்ரேட்ஸ், 1.28 கிராம் புரதச்சத்து இடம் பெற்றுள்ளதாக அமெரிக்க விவசாய துறை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here