ஆச்சரியத்தில் அசத்தும் தங்கம் விலை

தங்கம் மீதான விலை உயர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

0
394

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 264 உயர்ந்துள்ளது. 

ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க- சீன வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 264 அதிகரித்து ரூ. 29, 704க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 33 அதிகரித்து ரூ. 3713க்கு விற்கப்படுகிறது.