DfUtE-_VAAEsSce

கோலாலம்பூரில் ஆசியக் கோப்பை மகளிர் டி 20 போட்டிகள் நடைபெற்றன. இதில் நடப்புச் சாம்பியன் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 10) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 6 முறை சாம்பியன் இந்தியாவும், வங்கதேச அணிகளும் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணியின் பொருப்பற்ற மந்தமான ஆட்டத்தால் இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 112 ரன்களையே எடுத்தது.

அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் மட்டுமே சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 56 ரன்களை எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். வங்கதேச சார்பில் பந்து வீச்சாளர்கள் ருமானா மற்றும் கடிஜா, தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கி ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 113 ரன்களை எடுத்து ஆசியக் கோப்பையை வென்றது. அந்த அணியின் நிகார் சுல்தானா 27, ருமானா 23 ரன்களை எடுத்தனர். ஒரு கட்டத்தில் 83/4 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த வங்கதேச அணி பின்னர் சிறப்பாக ஆடி 3 விக்கெட் வித்தியாசத்தில் முதன்முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.

DfVnaKUX4AAL3OU

ஏற்கெனவே ரவுண்ட் ராபின் ஆட்டத்திலும் வங்கதேசத்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்