14 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேற்றப்பட்டன. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இன்று (செவ்வாய்க்கிழமை) துபாயில் நடைபெறும் ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் அணி லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேச அணிகளை வென்று பி(B) பிரிவில் முதலிடம் பிடித்தது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணி ‘சூப்பர்-4’ சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேச அணிகளிடம் தோல்வி கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

இன்று நடைபெற இருக்கும் சூப்பர் 4 சுற்றில் வலுவான இந்திய அணியை ஆப்கானிஸ்தான் அணி சமாளிப்பது என்பது மிகக் கடினமான காரியமாகும்.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

அபுதாபியில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டு சமபுள்ளிகளுடன் இருக்கின்றன.

இந்த இரு அணிகள் இடையிலான மோதலில் வெற்றி பெறும் அணி, துபாயில் வருகிற 28-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here