ஆசியக் கோப்பைப் போட்டிகளில் நேற்று மாலை இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்றது.

டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக பகர் சமான், இமாம் உல் ஹக் களம் இறங்கினார்கள்.

இமாம் உல் ஹக் 10 ரன்களிலும் அதன்பின் பகர் சமான் 31 ரன்கள், பாபர் ஆசம் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

4-வது விக்கெட்டுக்கு கேப்டன் சர்பிராஸ் கான் உடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். சற்று நிதானமாக ஆடிய சர்பிராஸ் அகமது 44 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 78 ரன்களை எடுத்து சோயிப் மாலிக் ஆட்டமிழந்தார்.

இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களே எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

238 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
, 95 பந்துகளை சந்தித்து ஷிகர் தவான் தனது 15 சதத்தை பூர்த்தி செய்தார். ஆசிய கோப்பை தொடரில் இது அவரது இரண்டாவது சதமாகும். பின்னர் 94 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் சர்மா.

அணியின் எண்ணிக்கை 210 ஆக இருக்கும் போது தவான் 114 ரன்களில் வெளியேறினார். 106 பந்துகளில் 111 ரன்களை எடுத்து தனது 19 ஒரு நாள் சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா.

இந்தியா 39.3 ஓவர்கள் முடிவில் 238 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here