14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சூப்பர் 4’சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேற்றப்பட்டன. ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

இந்நிலையில், சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நேற்றுத் தொடங்கியது. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மொகமது ஷசாது 20 ரன்களும், இசானுல்லா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி 32 ரன்களுக்கு முதல் 2 விக்கெட்டுக்ளை இழந்தது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிக பட்சமாக அஸ்கர் ஆப்கான் 67 ரன்களும், ரஹமத் ஷா 36 ரன்களும், சிறப்பாக ஆடிய ஹஷ்மதுல்லா ஷகிதி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 118 பந்துகளில், 7 பவுண்டரிகள் உள்பட 97 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்களை எடுத்தது.

பாகிஸ்தான் அணியின் மொகமது நவாஸ் 3 விக்கெட்டும், ஷகின் அப்ரிதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

முஜூப் அர் ரகுமான் வீசிய முதல் ஓவரிலேயே பகர் ஜமான் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

பின் நல்ல தொடக்கத்தை அளித்த இமாம் உல்-அக் 33வது ஓவரில் நஜிப்புல்லா வீசிய பந்தில் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்
2வது விக்கெட்டுக்கு இமாம் உல்-அக் மற்றும் பாபர் அசம் ஜோடி இணைந்து 154 ரன்கள் குவித்தது. அதன் பின் பாபர் அசம் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் கடைசி முன்று ஓவர்களில் 29 ரன்கள் அடிக்க வேண்டிய இக்கட்டான நிலை பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் சோயப் மாலிக்கின் அதிரடியால் அந்த அணி 49.3 ஓவர்கள் முடிவில் 258 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தடுமாறி வெற்றியைப் பெற்றது.

சோயப் மாலிக் 51 ரன்களுடனும் ஹசன் அலி 6 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் முஜீப் அர் ரகுமான் 2 விக்கெட்டையும் அப்டாப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக சோயப் மாலிக் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here