14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்கதேசமும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, பாகிஸ்தான் உள்பட 4 அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு முறை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்று தொல்வி அடைந்தது வங்கதேசம். அதனால் இம்முறை இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வெல்ல மிகவும் கூடுதல் முயற்சியில் வங்கதேசம் ஈடுபடப் போவது நிட்சயம்.

இந்தியாவைப் பொறுத்த வரை வங்கதேச அணி சற்று பலம் குறைந்ததாகத் தோன்றினாலும், இந்திய அணி சர்வ ஜாக்கிரதையாகவே அந்த அணியைக் கையாள வேண்டும்.

வழமைபோல் இந்திய வீரர்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்தியா 7-வது முறையாக ஆசிய கோப்பை வெல்வது உறுதி.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா.

வங்கதேசம்: லிட்டான் தாஸ், சவும்யா சர்கார், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், முகமத் மிதுன், இம்ருல் கேயஸ், மக்முதுல்லா, மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும். இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்