14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சூப்பர் 4’சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இலங்கை, ஹாங்காங் அணிகள் லீக் போட்டிகளிலேயே வெளியேற்றப்பட்டன.

சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா மற்றூம் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.

டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத் அதிரடியாக ஆடி 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நைப் 15 ரன்களும், நஜிமுல்லா சத்ரன் 20 ரன்களும் அடித்தனர். முகமது நபி சிறப்பாக விளையாடி 56 பந்தில் 64 ரன்கள் விளாசினார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

வெற்றி பெற 253 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு இறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 110 ஆக இருக்கும்போது அம்பதி ராயுடு 57 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, லோகேஷ் ராகுல் 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 44 ரன்னிலும், கேப்டன் தோனி 8 ரன்னிலும், மனீஷ் பாண்டே 8 ரன்னிலும், கேதார் ஜாதவ் 19 ரன்னிலும்
ஆட்டமிழந்தார் வெளியேறினர்.

ஆனால், கடைசி ஓவரை வீசிய ரஷித் கான் கடைசிவரை வெற்றிக்காகப் போராடிய ஜடேஜாவை 25 ரன்களில் வெளியேற்றி ஆட்டத்தை சமன் செய்தார்.

இறுதியில், இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, போட்டி சமனானது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் மொகமது நபி. அப்தாப் ஆலம், ரஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டும், ஜாவித் அஹமதி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நேற்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஷிகர் தவன் ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார் தோனி. இதன் மூலம் 200-ஆவது ஒரு நாள் ஆட்டத்துக்கு தலைமை தாங்கிய சிறப்பைப் பெற்றார் தோனி.

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்கு வகித்த துவக்க ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்