ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் இந்து கோவில்களைத் திறந்து வைக்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில், இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் இந்து கோவில்களைத் திறந்து வைக்கத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், இது ஆகம சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சைவ கோவில்கள் சிவராத்திரியின் போதும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசியின்போதும் இரவு திறந்து வைக்க ஆகமம் வகை செய்துள்ளதால், அதை மீறி புத்தாண்டையொட்டி கோவில்களை நள்ளிரவில் திறந்து வைக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

high

இந்த மனு மீது வியாழக்கிழமை (இன்று) விசாரணை நடைபெற்றது. அப்போது, புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோவில் நடை திறக்க தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுவினைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்